உள்நாடு

போலியான நாடகத்திற்கு பகரமாக உண்மையான நிறைவேற்று குழு முறைமைக்கு பிரவேசிப்போம்.

(UTV | கொழும்பு) – அதிகாரம் கொண்ட, பலமான நிறைவேற்று குழு முறைமையொன்றை பாராளுமன்றத்தில் ஸ்தாபிப்பதன் மூலம் இந்த பேரழிவில் இருந்து நாட்டை விடுவிக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன என பெயரளவில் உலகுக்கு காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் நாடகங்களுக்கு தாம் உடன்படவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வலுவான நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட பாராளுமன்ற குழு அமைப்பை நோக்கி நகர்வதன் மூலம் பாராளுமன்றத்தின் 225 பிரதிநிதிகளும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வலுவான பங்களிப்பை வழங்க முடியும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் நலனுக்காக இக்காரியத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடு பாரிய பேரழிவிற்குள்ளாகியுள்ள நேரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது அனைவரினதும் நோக்கமாகும் எனவும், ஆனால் இன்றும் கூட இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கூட மாணவ செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இளைய தலைமுறை மர்மமான முறையில் கடத்தப்பட்ட வன்னமுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இந்நாட்டில் இருபது இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு நிவாரணமும் ஊட்டச்சத்து ஆற்றல் தேவைப்பாடு உள்ளதாகவும், அந்த ஊட்டச்சத்துத் தேவையை பூர்த்தி செய்யத் தேவையான அளவு நிதி கூட நாட்டில் இல்லாத நிலை உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் தாய்மார்கள்,பிள்ளைகள், பிரஜைகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக விசேட தலையீடு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்தகைய தருணத்தில், நாட்டுக்கு கேடு விளைவிக்கும் எந்த செயற்பாட்டிலும் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ ஈடுபடாது எனவும் தெரிவித்தார்.

தேசிய மறுசீரமைப்பு திட்ட வரைவுக் குழுவின் விசேட கூட்டம் இன்று (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அரசியல் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள்,தொழிற்சங்க பிரதிநிதிகள்,புத்திஜீவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னர், இந்தக் குழு பல சந்தர்ப்பங்களில் ஒன்றுகூடி, தேசிய மறுசீரமைபுகளுக்கான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

தேர்தல் முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்

வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா குன்றை பௌர்ணமி இரவில் பார்வையிடலாம்

editor