சூடான செய்திகள் 1

போலியான கச்சேரியொன்றை நடாத்தி வந்த பெண் கைது

(UTV|COLOMBO)-ராஜகிரிய பிரதேசத்தில் போலியான கச்சேரியொன்றை நடாத்திச் சென்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் பிரவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக குறித்த பெண் தனது கணவருடன் இணைந்து போலியான முறையில் கடவுச்சீட்டு , தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் ஆகியவற்றை தயாரித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

30 வயதுடைய குறித்த பெண்ணின் கணவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

Related posts

180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 பேர் ஆக உயர்வு

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வைத்தியசாலையில் அனுமதி