உலகம்

போராட்டக்காரர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு)- அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட், பொலிஸாரினால் தாக்கப்பட்டு மரணமானதை தொடர்ந்து இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் போராட்டங்களில் கலந்துக்கொள்பவர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அந்நகர மேயர் அறிவுறுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெறும் போராட்டங்களிலும் மக்கள் முடிந்த வரை சமூக இடைவெளியை கடைப்பிடித்து போராட்டம் நடத்தவேண்டும் என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் போராட்டக்காரர்கள் அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனை செய்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவில் இதுவரை 1,837,170 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 106,195 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்து ராணி உலகை விட்டும் பிரிந்தார்

புதிய வைரஸ் காய்ச்சல் குறித்து சீனா வெளியிட்ட அறிவிப்பு

editor

இஸ்ரேலில் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு