உள்நாடு

போதைப் பொருள்களுடன் 455 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 455 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (11) காலை 06 மணிமுதல் இன்று (12) அதிகாலை வரை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹெரோய்ன் வைத்திருந்த 170 பேர், கஞ்சா வைத்திருந்த 87 பேர், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 147 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஐஸ், மாவா, பாபுல் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களை வைத்திருந்த 51 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட உலர் உணவு பொதிகள் மீட்பு – 3 பேர் கைது – மன்னாரில் சம்பவம்

editor

கடவுச்சீட்டு வழங்கும் பனி மீண்டும் ஆரம்பம்