சூடான செய்திகள் 1

போதைப்பொருள் கப்பலை சிறைப்பிடத்த பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி பாராட்டு!

(UTV|COLOMBO) சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களினால் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 120 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த கப்பலை சிறைப்பிடித்த பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவொன்றின் ஊடாக அவர் இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தெற்கு கடற்பரப்பில் பாதுகாப்பு தரப்பினர் நேற்று முன்திம் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது 107 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், குறித்த கப்பலில் பயணித்த ஒன்பது ஈரானியர்களும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேயிலைக்கொழுந்தின் விலை அதிகரிப்பு

கல்விசாரா ஊழியர்கள் சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில்…!

சம்பிக்க ரணவக்க தற்போது அவரது அலுவலகத்தில்