உள்நாடு

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது

(UTV|மாத்தறை) – மாத்தறை பகுயில் ஐஸ் போதைப்பொருடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் கைதான ஆணிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளையும், பெண்ணிடமிருந்து 55 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் இருவரும் மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை