சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி தொடர்பான அறிக்கை விரைவில்

(UTV|COLOMBO)-பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட குரல் மாதிரி சம்பந்தமான அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் கூறியுள்ளது.

அறிக்கை தயாரிக்கப்பட்டதன் பின்னர அதனை நீதிமன்றத்திற்கு சமர்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.

முக்கிய பிரமுகர்கள் கொலை சதித்திட்டம் சம்பந்தமாக நாமல் குமார வழங்கிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் தொடர்பிலான விசாரணைக்கு அமைவாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தினால் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் குரல் மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டது.

கடந்த 14ம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராக குரல் மாதிரியை வழங்கியிருந்தார்.

அதன்படி அந்தக் குரல் மாதிரி பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன் பொலிஸ் மா அதிபரை மீண்டும் அழைக்கும் தேவையில்லை என்றும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.

 

 

 

Related posts

பண மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது…

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை

தங்க மோதிரங்களுடன் ஒருவர் கைது