உள்நாடு

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

(UTV | கொழும்பு) – பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர், இன்று(07) காலை கடவத்தை பொலிசில் சரணடைந்த நிலையில் இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் கடவத்தை பொலிசார் தெரிவித்திருந்தார்.

குறித்த பொலிஸ் பரிசோதகர் வெலிவேரிய பகுதியை சேர்ந்த வெஹெரவத்த கங்கானமலாகே வசந்த குமார எனும் 49 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

BWIO- USA சர்வதேச விருது: சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் சுத்தப்படுத்தும் பணி முன்னெடுப்பு

editor

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]