உள்நாடு

பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு தும்மலசூரிய பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் அத்துல குமார கமமே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் தும்மலசூரிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் தும்மலசூரிய தலைமையில்   விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டது

அத்துடன்  ஏப்ரல் 21 தாக்குலை நடாத்திய சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவர் தும்மலசூரிய தலைமையில்  கைது  செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னணியிலேயே ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு தும்மலசூரிய காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் பிரதான காவல்துறை பரிசோதகர் அத்துல குமார கமமே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Related posts

17 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றம் – புதிய சபாநாயகர் யார் ?

editor

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.

சமல் ராஜபக்ஷவிற்கு இரட்டை இராஜாங்க அமைச்சு பதவி