உள்நாடு

பொலிஸாரின் துப்பாக்கிகளைப் பறித்து சுட முயன்ற கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் பொலிஸாரால் சுட்டுக் கொலை | வீடியோ

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு (21) மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் சந்தேகநபர்களை அழைத்துச் சென்றபோது, ​​பொலிஸாரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுட முயன்ற போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறுகையில்,

“நேற்று (21) இரவு 9 மணியளவில் கொட்டாஞ்சேனை தெருவில் உள்ள கைப்பேசி விற்பனை நிலையம் ஒன்றினுள் சசி குமார் என்ற 38 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.”

“துப்பாக்கிச் சூடு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரால் நடத்தப்பட்டது.”

“சுடப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு உயிரிழந்தார்”

“துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும்போது பொலிஸார் துரத்திச் சென்று கைது செய்தனர்.”

“இதன்போது, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.”

“பின்னர், நேற்று இரவு சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த மற்ற ஆயுதங்கள் குறித்து பொலிசார் தகவல் அளித்ததை அடுத்து, அவர்கள் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.”

“அங்கு, சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிகளைப் பறித்து அவர்களைச் சுட முயன்றனர்.”

” இதன்போது, பொலிஸ் அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.”

“இந்த சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்த நிலையில், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.”

வீடியோ

Related posts

தனது தமிழ் வாக்குகளை பறிக்க சஜித் எடுத்த முயற்சி தோல்வி – ஜனாதிபதி ரணில்

editor

சவால்களை எதிர்கொள்ளக் கூடிய புதிய திட்டங்களோடு பயணிப்பதற்கு மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் தீர்மானம்

editor

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு