வகைப்படுத்தப்படாத

பொலன்னறுவையில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – பொலன்னறுவை – பெந்திவேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே உந்துருளியில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர்.

காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்றுடன் உந்துருளி ஒன்று மோதியமையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நால்வரும் ஒரு உந்துருளியில் பயணித்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பலியானவர்கள் 23 முதல் 47 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில், குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் பொலன்னறுவை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

பாகிஸ்தான் சாலை விபத்தில் 18 பேர் பலி

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

ரயில் விபத்து – பலியானோரின் எண்ணிக்கை உயர்வு