உலகம்

பொருட்களுக்கான வரிகள் மூன்று மடங்காக அதிகரிப்பு – சவூதி அதிரடி

(UTV | கொவிட் 19) – பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், பொருட்களுக்கான வரிகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக , கடந்த சில மாதங்களில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள இந்நிலையில், சவூதி அரேபியாவுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சர்வதேச ரீதியில் விமானப் போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்ட நிலையில், சுற்றுலாத் துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவற்றைக் கருத்திற் கொண்டே. பொருட்களுக்கான வரி 5 வீதத்திலிருந்து 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Related posts

ஜப்பான் பிரதமர் பதவி விலகத் தயார்

முப்படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சி?

Service Crew Job Vacancy- 100