உள்நாடுசூடான செய்திகள் 1

பொத்துவிலில் 3வர் போதைப்பொருளுடன் கைது!

(UTV | கொழும்பு) –

பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள 3 பிரதேசத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேரை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (4) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை பொத்துவில் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பொத்துவில் நகர பகுதியில் 26 வயதுடைய ஒருவரை 350 மில்லிக்கிராம் கஞ்சாவுடனும் சியம்பலாண்டுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரை 200 மில்லிகிராம் கஞ்சாவுடனும் கைது செய்தனர்.

அதேவேளை அறுகம்பை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து உல்லை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஹரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும் இந்த வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குமார வெல்கம என் மீது கொண்ட அன்பே அவ்வாறு கூற காரணம்

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவின விபரம்…

முறையான திட்டத்தை வகுக்குமாறு அரசிடம் ரணில் கோரிக்கை