சூடான செய்திகள் 1

பொது மக்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு ஒருபோதும் பின்வாங்க போவதில்லை – சஜித் [VIDEO]

(UTV|COLOMBO) – புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று(10) காலி முகத்திடலில் நடைபெற்றது.

தனது உரைகளில் எந்த விதத்திலாவது ´ஸ்ரீ முகம்´ என தெரிவித்திருந்தால் அதற்காக தேரர்களிடமும், பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தன்னால் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக பொது மக்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறினார்

அதேபோல் தன்னால் உருவாக்கப்படும் புதிய இலங்கையில் எந்தவகையிலும் களவு, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு இடம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரவூப் ஹக்கீமுக்கு பல தடவை தெளிவுபடுத்தியும், மீண்டும் தவறு செய்கின்றார் – ACJU கண்டனம்

கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு

சர்வகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்