உள்நாடு

பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் – FUTA

(UTV | கொழும்பு) – அரசியல் ரீதியான ஒப்பந்தங்கள் ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் அதேவேளை பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

FUTA இன் தலைவர் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில், நாட்டின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி ஒருவர் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆணை இல்லாத பிரதமரை ஏற்றுக்கொள்வது கற்பனை செய்ய முடியாதது என பேராசிரியர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த நேரத்தில் ஒன்று திரண்ட மக்களுடன் அரசியல் விளையாட்டுகளை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்றார்

Related posts

நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது

ஹிஜாப் அணிந்ததால் : 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தம்