சூடான செய்திகள் 1

பொதுஜன முன்னணியின் பேரணிகளில் SLFP பங்கேற்காது – தயாசிறி

(UTV|COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இடையே உடன்பாட்டில் கையெழுத்திட்டாலும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ள போதும், பொதுஜன முன்னணியின் தேர்தல் பேரணிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்காது என சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இறுதியாக இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட அவர்,

“பொதுஜன முன்னணியின் பேரணிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சந்தித்த துன்புறுத்தல்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் 5,000 கூட்டங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

அத்துடன் வீடு வீடாகச் சென்று சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பரப்புரை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், நாங்கள் பொதுஜன முன்னணியின் மேடையில் அவர்களுடன் இணைந்து ஏறுவதற்கு தயாரில்லை. நாங்கள் அடிமட்டத்தில் இருந்து பணியாற்றுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்-நுகர்வோர் அதிகார சபை

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதி பகிர்ந்தளிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பம்

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்