கேளிக்கை

பொங்கல் ரேஸில் இணைகிறதா ரஜினியின் ‘பேட்ட’

(UTV|INDIA)-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை வரும் 2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை பொறுத்தே ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும். மேலும் நவம்பர் 29ஆம் தேதி ரஜினியின் ‘2.0’ ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மாத இடைவெளியில் மற்றொரு ரஜினி படம் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

ஏற்கனவே தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தினத்தில் மேலும் சில திரைப்படங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது

புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ஜீவா

ஹன்சிகா படத்திற்காக இடைவிடாமல் உழைக்கும் சிம்பு?