வகைப்படுத்தப்படாத

பேஸ்புக்கின் ஆளில்லா விமான சோதனை வெற்றி

(UDHAYAM, COLOMBO) – பேஸ்புக் நிறுவனம் ஆளில்லா விமானத்தை வானில் இயக்கி வெற்றி பெற்றுள்ளது.

‘அக்யூலா’ என்று அழைக்கப்படும் இந்த ஆளில்லா விமானம், அரிசோனாவில் ஒரு மணி 46 நிமிடங்கள் வானில் பறந்தது.

இது பேஸ்புக் நிறுவனத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்த ஆளில்லா விமானம் 60,000 அடி உயரத்தில் பறக்க விட வேண்டும் என்பது பேஸ்புக் நிறுவனத்தின் குறிக்கோள்.

ஆனால், 3000 அடி உயரத்தில் மட்டுமே பறந்துள்ளது. என்றாலும் சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது அந்நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொலை தூரத்துக்கும் இணைய சேவை அளிக்கும் வகையில், பேஸ்புக் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

Related posts

Double-murder convict hacked to death in Hambantota

இந்தோனேசியா பயங்கர நிலநடுக்கத்தில் 91 பேர் பலி

காலநிலை