வகைப்படுத்தப்படாத

பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மாடல் அழகி உடையில் தீ பற்றியதால் பரபரப்பு

(UTV|CENTRAL AMERICA)-மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில், அலங்கார உடை அணிந்து வந்த மாடல் அழகி உடையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அமெரிக்காவில் உள்ல ஒரு நாடு எல் சால்வடோர். இங்கு பேஷன் ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட பல்வேறு மாடல் அழகிகள் தங்களது நிறுவனம் சார்பில் தயாரான பேஷன் ஆடையை அணிந்தபடி வலம் வந்தனர்.

இந்நிலையில், இறகுகளால் ஆன உடையை அணிந்தபடி மாடல் அழகி ஒருவர் ஒய்யாரமாக நடந்து வந்தார். அப்போது மேடையின் ஒரு புறத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

அதை கவனிக்காத மாடல் அழகி தனது அலங்கார ஆடையை அணிந்து வந்தார். அப்போது அவரது ஆடையில் விளக்கு பட்டு திடீரென தீ பிடித்தது.

மாடல் அழகியின் ஆடையில் பிடித்த தீயை கண்ட மற்றவர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை போராடி அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பேஷன் ஷோவில் மாடல் அழகி உடையில் தீ பிடித்ததால் மேடையில் இருந்தவர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

முதல் குழந்தை பிறந்த 26 நாளில் மீண்டும் இரட்டைக்குழந்தை பெற்ற பெண்

ශ‍්‍රී ලංකා නිදහස් පක්ෂ ප‍්‍රතිසංවිධාන වැඩසටහන යටතේ නව පත්වීම් ලිපි පිළිගැන්වීම ජනපති අතින්

சூறாவளியால் 38 பேர் உயிரிழப்பு