உள்நாடு

பேரூந்து கட்டணத்தை குறைக்க பேரூந்து சங்கங்கள் தயாராம்

(UTV | கொழும்பு) – தனியார் பயணிகள் போக்குவரத்து பேரூந்துகளுக்கு நாளாந்த எரிபொருள் விநியோகம் தொடருமானால் மக்களுக்கு குறைக்கப்பட்ட எரிபொருள் விலைச் சலுகையை வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடியதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவின் ஊடாக தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்ற போதிலும், விநியோகம் போதுமானதாக இல்லை என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவின் ஊடாக வழங்கப்படும் எரிபொருளில் 1,500 தொடக்கம் 2,000 வரையான பேரூந்துகளை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கான மாற்று வேலைத்திட்டம் ஒன்றை அவசரமாக தயாரிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பல பிரதேங்களில் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

‘எவர்கிவன்’ சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளது

பிரதமர் பங்களாதேஷ் நோக்கி பறந்தார்