உள்நாடு

பேரூந்துக்கு தீ வைப்பு : ஆர்ப்பாட்டம் பதற்ற நிலையிலும் தொடர்கிறது

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு அருகில் இன்று ( 31) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது நிலையில் அங்கு மேலும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவருக்கும் மற்றுமொருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிசார் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சூழ்நிலை தொடர்ந்தும் பதற்ற நிலையில் உள்ளதோடு அங்குள்ள பேரூந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் ஜனவரி மாதத்தில் …

இலங்கைக்குள் நீர்மூழ்கி கப்பல்கள்- அமெரிக்காவின் அவசர உதவியை நாடும் இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தி காலமானார்