உள்நாடு

பேரூந்துகளில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறைப்பாடு

(UTV|கொழும்பு)- சில தனியார் பேரூந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேரூந்துகள் தொடர்பில் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம், கமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பேரூந்துகளில் ஆசனங்களை விட அதிக பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

Related posts

விக்டோரியாவில் குளிக்கச்சென்ற திஹாரி தம்பதி ஜனாஸாவாக மீட்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தம் : உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்று பாராளுமன்றுக்கு

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று விசேட உரை