உள்நாடு

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீண்டும் என்டிஜன்

(UTV |  களுத்துறை) – இந்திய கடற்பிராந்தியங்களுக்கு அருகில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு பின்னர் மீள கரை திரும்பும் மீனவர்களுக்கு என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இந்த நடவடிக்கைகள் இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அதன் முகாமையாளர் ஹெரங்க எட்வட் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தை அண்டிய மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து இன்றைய தினம் 410 பேரிடம் இவ்வாறு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

வரவு-செலவுத் திட்டம் 2021

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவைகள் பாதிப்பு.