உள்நாடு

பேருவளையில் விருந்துபசாரத்தை நடத்திய 18 பேர் க‍ைது

(UTV|பேருவளை )- பேருவளை விடுதியொன்றில் விருந்துபசாரத்தில் ஒன்றுகூடிய 18 பேர் அடங்கிய குழுவொன்றை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடல், சுற்றுலா, விழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த உத்தரவை மீறி செயற்பட்டமைக்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களை பயன்படுத்திக் கொண்டிருந்த போதே கைது செய்ததாக பேருவளை பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Related posts

 மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு- வசந்த முதலிகே

மாத்தறை புறா தீவிற்கு செல்லும் கொடி பாலம் இடிந்து வீழ்ந்தது

புனாணை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பலர் வீடு திரும்பல்