சூடான செய்திகள் 1

பேருந்து விபத்தில் 20 பேர் காயம்

(UTVNEWS | COLOMBO) – முந்தலம், செம்பட்ட பகுதியில் அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்து உள்ளதுடன் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹாவில் இருந்து தலவில தேவாலயத்திற்கு யாத்திரை சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி பேருந்து கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வேலை நிறுத்த போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நேபாள பிரஜையின் உடலில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று ஆரம்பம்