சூடான செய்திகள் 1

பேருந்து கட்டண குறித்து ஆராய்வு

(UTV|COLOMBO)-பேருந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

கடந்த தினம் டீசல்விற்பனை விலை லீற்றருக்கு 7 ரூபாய் என்ற அடிப்படையில் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் பேருந்து பயணக் கட்டணத்தை 2 சதவீதத்தால் குறைப்பது குறித்து ஆராய்வதற்காக இன்று நண்பகல் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது எட்டப்படுகின்ற இணக்கப்பாடு தொடர்பில் அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பேருந்து கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை

பல்கலைகழக நடவடிக்கைகள்-பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கலாம்

உலக மது ஒழிப்பு தினம் இன்று