சூடான செய்திகள் 1

பேருந்து ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

(UTV|COLOMBO)-தென் மாகாண நெடுந்தூர தனியார் பேருந்து ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பை கைவிடுமாறும், அவ்வாறு இல்லாவிடின் நாளை முதல் பயண அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

அத்துடன், பேருந்துகளில் கடமை புரியும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அனுமதிப்பத்திரத்தினை இரத்து செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் நேற்று (25) காலை முதல் தொடர்ந்து பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

நெடுந்தூர பேருந்து சேவைகளுக்கு, குறுந்தூர பேருந்துகள் தடையாக இருப்பதாக தெரிவித்து இந்த பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று (25) இரவு அம்பலங்கொட – மாதம்பாகம பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்து சபையினுடைய பேருந்தின் மீது இனந்தெரியாத சிலர் கற்களை வீசியுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

பதில் பிரதம நீதியரசராக புவனெக அலுவிகார பதவிப்பிரமாணம்

பிதுரங்கல சம்பவம்-நாட்டின் பெருமைக்கே கேடு

பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது