உள்நாடு

பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை

(UTV|கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தெற்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழைபெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழைபெய்யக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு வரையிலும், காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டகளப்பு வரையான கடற் பரப்பில் அலையின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மருந்துகளின் விலைகள் மீண்டும் உயர்வு

தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பூநகரி தபாலகம்!

ஹிஜாஸ் தொடர்ந்தும் விளக்கமறியலில்