உள்நாடு

பெருந்தோட்ட மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக பலப்படுத்துங்கள் – சஜித்

(UTV | கொழும்பு) –

தோட்டங்களில் வேலை செய்பவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்கி, பயிரடப்படாத அரச தரிசு நிலங்களை அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப சிறு தேயிலை தோட்டங்களாக மாற்றி, இன்றைய தொழிலாளியை நாளைய தொழில் முனைவோராக்கும் செயல்திட்டம் நிச்சயம் முன்னெடுக்கப்படும். இது தொழிலை விட வாழ்வாதாரம் என்றும் இந்த நிலத்தில் தேயிலை தோட்டம் அமைந்து இருப்பது போலவே வீட்டை நிர்மானித்து சிறந்த வருமானத்தை ஈட்டிக்கொள்ளலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

நாட்டின் தேயிலை உற்பத்தியில் 70 வீதமானது சுமார் 40 வீதமான காணிகளை வைத்திருக்கும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களால் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 60 சதவீதத்திற்கும் அதிகமான நில உடைமை கொண்ட பெரிய அளவிலான தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை உற்பத்திக்கு 30 சதவீத பங்களிப்பையே வழங்குகின்றன. சிறிய தேயிலை தோட்டங்களை ஊக்குவிப்பது என்பது தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதாகும் எனவும், அதன் பின்னர் சமுர்த்தி மற்றும் அஸ்வெசும போன்ற திட்டங்களுக்கு தேவைப்பாடு ஏற்படாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

அவர்களுக்கு சொந்த தேயிலை தோட்டத்தில் தேயிலை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் தயார் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

தொலைநோக்குப் பார்வையுடனும் வேலைத்திட்டத்துடனும் இந்த சேவை மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 97 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் களுத்துறை, புளத்சிங்கள, மஹகம ஆரம்ப பாடசாலைக்கு

வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

 

ஆரம்பப் பிரிவு பாடசாலையொன்றுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

 

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நேரடியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.சரியான விடயங்களைச் செய்ய வேண்டும். கல்வி, சுகாதாரம்,வாழ்வுரிமை மற்றும் ஜீவனோபாயம் என்பன மனித உரிமைகளாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? மனம் திறந்தார் சந்திரிக்கா

editor

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயார் – ராஜித்த சேனாரத்ன

editor

‘Beaver Blood Moon’ – இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று