சூடான செய்திகள் 1

பெயர் களங்கப்படும் விதத்தில் முன்னெடுக்கப்படும் போலி பிரச்சாரங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-சமூக வலைத்தளங்கள் ஊடாக தனி நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும், கஞ்சிபானி இம்ரானின் சட்டவிரோத மனைவி குடியிருந்த அடுக்குமாடித் தொடர் என்னுடையது எனவும் சமூக வலைத்தளங்கள் ஊடாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும், இவ்வாறான ​போலி பிரச்சாரங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இதற்கான தகவல்களைச் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரிப்பு