சூடான செய்திகள் 1

பெண்ணின் வயிற்றில் 19.5Kg நிறையுள்ள கட்டி – வெற்றிகரமாக அகற்றி சாதனை

(UTVNEWS|COLOMBO) – பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த அந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்த்துள்ளார்.

நேற்று முன்தினம் (05) முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாகவும், இது சுமார் 2 மணித்தியாலம் இடம்பெற்றதன் பின்னர் அந்தக்கட்டியை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

19.5 Kg நிறையுடைய சுமார் 48CM நீளத்தையும் 34CM அகலத்தையும் 23CM உயரத்தையுமுடைய பெரும் கட்டி ஒன்றை வெட்டி அகற்றிய சாதனையை எமது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களினால் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டதாகவும் க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்த்துள்ளார்.

தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் புறச்சூழல் அழகுபடுத்தப்பட்டு சுற்றாடல் நேய செயற்றிடங்களும் அமுல் படுத்தப்படுவதாகவும் தாய் சேய் நலனிற்காக விசேட விடுதி ஒன்றும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்

அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர்…