உள்நாடு

பெண் ஊழியரை தாக்கிய அரச பொறியியலாளர் கைது

(UTV | கொழும்பு) –  பெண் ஊழியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடுகம்பொல அலுவலகத்தின் தலைமை பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பெண்ணை தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்

வெங்காயத்திற்கான தட்டுப்பாடு அதிகரிப்பு – இறக்குமதி செய்ய தீர்மானம்

editor

இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்