வகைப்படுத்தப்படாத

பெண் அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)- பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம், மலையக ஆசிரியர் முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கை கல்வி சமூக சம்மேளனம், இலங்கை ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாடடத்தை முன்னெடுக்கவுள்ளது.

ஆசிரியர் சமூகத்தையும் அதிபர் சமூகத்தையும் கல்விச் சமூகத்தையும் பெண்கள் சமூகத்தையும் அவமானப்படுத்தியவர்கள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தயநாக்கவுக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, பெப்ரவரி முதலாம் திகதி அவர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையாகுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

63 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட இரு பஸ்கள்.

திருகோணமலையில் 7 மீனவர்கள் கைது

ஜப்பான் இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி விஜயம்