உலகம்

பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய அவுஸ்திரேலியா

(UTV | அவுஸ்திரேலியா) –  இந்தப் புத்தாண்டு தினத்திலிருந்து அவுஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்

தேசிய கீதம் இனி அவுஸ்திரேலியாவை ‘இளமையான, சுதந்திரமான’ என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஒற்றுமைக்கான ஊக்கத்தை இந்த மாற்றம் உருவாக்கும் என்று நம்புவதாக மாரிசன் கூறியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரீமியர் கிளாடிஸ் பெரஜிக்லியன் இந்த மாற்றத்தைப் பரிந்துரைத்தார்.

இந்த மாற்றம் எந்தப் பொருளையும் நீக்கவில்லை. ஆனால், நிறைய பொருள் சேர்த்திருக்கிறது என்று அவுஸ்திரேலிய பிரதமர் மாரிசன் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – அன்டோனியோ குட்டரெஸ் இடையில் சந்திப்பு.

அமெரிக்காவின் அச்சுறுத்தலை கேட்டு பின்வாங்கப் போவதில்லை

பூட்டானில் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு