உள்நாடு

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

(UTV | கொழும்பு) –  புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, இன்று(12) திங்கட்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறுமென பிறைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பிறைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

Related posts

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி

UPDATE – மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் வீதியில் மண்சரிவு [PHOTOS]