உலகம்

புத்தாண்டில் குழந்தைகள் பிறப்பு: இந்தியா முதலிடம்

(UTVNEWS | INDIA) –புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, நேற்று நள்ளிரவு முதல், ஜனவரி 1ஆம் தேதி இரவு வரையிலான காலக்கட்டத்தில், உலகம் முழுவதும்  சுமார் 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

அதில், சுமார் 67 ஆயிரம் குழந்தைகள் இந்தியாவில் பிறக்கவுள்ளதாகவும் கணித்துள்ளது. உலக அளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் பிறக்கவுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 17 சதவிகிதமாக உள்ளது.

பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள சீனாவில், சுமார் 46ஆயிரம் குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் சுமார் 26ஆயிரம் குழந்தைகளும், பாகிஸ்தானில் சுமார் 16 ஆயிரம் குழந்தைகளும் பிறக்கவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு ஜூன் 30 வரை நீடிப்பு

அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தடை

பிரேசில் ஒரே நாளில் 29 ஆயிரம் பேருக்கு கொரோனா