உள்நாடுவகைப்படுத்தப்படாத

புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­ப­தியின் விளக்­க­ம­றியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு!

இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டு கடந்த 6ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­ப­தியின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு பிர­தம நீதி­வான் நீதி­மன்றில் சந்­தேக நபர் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது அவ­ரது பிணை கோரிக்­கையை நிரா­க­ரித்த நீதிவான் சந்­தேக நபரை எதிர்­வரும் 17ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

இதே­வேளை புத்­தளம் – சிலாபம் பதில் காதி­ நீ­தி­வா­னாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள நீர்­கொ­ழும்பு காதி­நீ­திவான் எம்.எம்.முஹா­ஜிரீன் புத்­தளம் காதி­ நீ­தி­மன்றில் நிலு­வை­யி­லுள்ள வழக்கு விசா­ர­ணை­களைத் தொடர முடி­யா­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்ளார். நீதி­மன்­றி­லி­லுள்ள வழக்கு கோவைகள் மற்றும் ஆவ­ணங்கள் முன்னாள் காதி­ நீ­தி­வா­னி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்­றதன் பின்பே பணி­யினை ஆரம்­பிக்க முடி­யு­மென உரிய அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்ளார்.

இதே­வேளை புத்­தளம் காதி­ நீதி நிர்­வாகப் பிரி­வி­லி­ருந்து புதி­தாக வழக்­குகள் தாக்கல் செய்­யப்­ப­டு­வ­தாக இருந்தால் எதிர்­வரும் 12ஆம் திகதி புத்­தளம் பள்ளி வீதியிலுள்ள முஸ்லிம் கலாசார மண்டபத்தில் காலை 8 மணிமுதல் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அங்கு சமூகமளித்து தன்னைச் சந்திக்க முடியுமெனவும் பதில் காதி நீதிவான் அறிவித்துள்ளார்.-

Related posts

பரிட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் விஜயதாஸ ராஜபக்ஷ

editor

රටවල් 48ක සංචාරකයින්ගෙන් හෙට සිට මාසයක් වීසා ගාස්තු නොකෙරේ