உள்நாடு

புத்தளம் மாவட்டம் முடங்கும் சாத்தியம்

(UTVNEWS | COLOMBO) -கொரோனா  வைரஸ் தொற்று பரவல் குறித்த அதிக ஆபத்தை எதிர்கொள்ளும்  புத்தளம் மாவட்டத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கும் நிலைமை ஏற்படலாம் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார்.

இன்று மாலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறுனார்.

மேலும் தெரிவிக்கையில்,கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான ஆபத்து அதிகமான இடமாக புத்தளம் மாவட்டம் உள்ளது.

இத்தாலியில் இருந்து, மார்ச் முதலாம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் உட்பட்ட காலத்தில் வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படாத பலர்  புத்தளம் முழுவதும் உள்ளனர்.

அவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் சுகாதார அலோசனைகளை புறக்கணித்தால் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான போக்கு வரத்து உள்ளிட்டவை முடக்கப்படலாம்.

அவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் பொறுப்பற்று செயற்பட்டால் முடக்கல் குறித்த செயற்பாட்டுக்கு நாம் தள்ளப்படலாம் என்றும் கூறினார்.

Related posts

பாடசாலைகளது மீள் ஆரம்பம் தொடர்பில் உரிய தரப்புக்கு சுற்றறிக்கை

‘போராட்டக்காரர்களின் தூரநோக்கின்மையால் போராட்டம் வழிதவறியது’

இன்று முதல் Park & Ride பஸ் சேவை