சூடான செய்திகள் 1

புத்தளத்தில் பயணப்பையால் இரவு முழுவதும் பதட்டம்!!

(UTVNEWS | COLOMBO) -புத்தளம் சியம்பலாவெவ பகுதியில் பயணப்பையால் இரவு முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

அதனை அடுத்து இந்த செய்தி ஊர் முழுவதும் பரவிய நிலையில், இந்த பொதியை இளைஞன் ஒருவர் கொண்டு செல்வதனை அவதானித்ததாக அந்த பகுதி நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் பொதியில் இருந்து புழுக்கள் வெளியேறுவதனை அவதானித்துள்ளனர். இதில் உயிரிழந்த ஒருவரின் சடலம் ஒன்று இருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார் இரவு முழுவதும் பாதுகாத்துள்ளனர்.

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்,அதற்கமைய பொலிஸார் அந்த இளைஞனிடம் சென்று விசாரித்த போது, நாய் கிணற்றில் விழுந்து உயிரிழந்து விட்டதாகவும், தாய் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த பையில் நாயின் சடலத்தை வைத்து அதனை காட்டிற்குள் வீசியதாக இளைஞன் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மைத்திரியை விசாரிக்குமாறு உத்தரவு

350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை

மேலும் 50 பேர் பூரண குணமடைந்தனர்