உள்நாடுசூடான செய்திகள் 1

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்

(UTVNEWS| COLOMBO) – புத்தளம் நகரில் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் குணமடைந்துள்ளார்.

இந்தோனேசியாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர், மார்ச் மாதம் 16ஆம் திகதி புத்தளத்திற்கு வந்த நிலையில் 14 நாட்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

மார்ச் மாதம் 28 திகதி சுகவீனம் காரணமாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் , மேலதிக பரிசோதனைக்காக அன்றைய தினமே குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இதன்போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் பூரணமாக குணமடைந்து நேற்று வெள்ளிக்கிழமை (10) வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

Related posts

“Clean Sri Lanka” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் உறுதி

editor

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை.

சீரற்ற காலநிலையினால் 9 பேர் உயிரிழப்பு-பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா…