உள்நாடு

புதிய வரிக் கொள்கைகளில் திருத்தங்களை கோரும் GMOA

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்துள்ளது.

அத்துடன் சுகாதாரம் மற்றும் பிற துறைகளை பாரிய பள்ளத்தில் தள்ளக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் செயலாளர் மருத்துவ கலாநிதி ஹரித அலுத்கே, வரிக் கொள்கையில் திருத்தங்களை சமர்ப்பிக்கும் பாரிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை மற்றும் நிபந்தனைகளின்படி வரிக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன என்பது தெளிவாக உள்ளது

இதில் மறைக்க எதுவும் இல்லை என்றும் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின் அழுத்தம் காரணமாகவே இந்த வகையான வரிக் கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வரிக் கொள்கைகளின் விளைவாக, தொழில் வல்லுநர்களைப் பற்றிய அறிவு இல்லாத கற்காலத்திற்கு நாடு செல்கிறது. பல மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியாளர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ள புற மருத்துவமனைகளில் இந்த நிலைமை மோசமாக உருவாகி வருகிறது. பெரும்பாலான சிறப்பு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால், பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் நாட்டை விட்டு வெளியேறும் முடிவு அந்த தொழில் வல்லுனர்களின் குடும்பங்களின் நலனை பொறுத்தவரையில் சிறந்ததாக மாறியுள்ளது.

எனவே, இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்க தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

Related posts

வீதிக்கு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள்

நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாடிய ஜனாதிபதி ரணில்!

மீன் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகின்றது