சூடான செய்திகள் 1

புதிய கூட்டணி உருவானது; தெரிவானார் ஜனாதிபதி வேட்பாளர்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புதிய கூட்டணியின் சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக முன்னணியாக உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியின் யாப்பு தொடர்பாக பங்காளி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

போகம்பர கலாசார நிலையத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது பிரதமர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புதிய கூட்டணியின் சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சரியான நேரத்தில் அவரது பெயரை அறிவிப்போம்.

Related posts

ஹிஸ்புல்லாவை குற்றப்புலனாய்வு தினைக்களத்திற்கு செல்லுமாறு தீர்ப்பு

ஐக்கிய தேசிய கட்சியால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

இன்று 24 மணி நேர நீர் வெட்டு