வகைப்படுத்தப்படாத

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இன்று இரவு கலந்துரையாடவுள்ளனர்.

அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் புதிய அரசியல் அமைப்பு குறித்த விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அரசியல் அமைப்பு குறித்து நியமிக்கப்பட்ட குழுவும் இந்த சந்திப்பில் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிகரட் துண்டால் ஏற்பட்ட தீ விபத்து

கிரீஸில் போராடி அணைக்கப்பட்டது காட்டுத்தீ

ඉන්දීය පළමු විදේශිය පරීක්ෂණය සඳහා මෙරට පාස්කු ප්‍රහාරය තෝරාගනී