சூடான செய்திகள் 1

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு அடுத்த வாரம்…

(UTV|COLOMBO)-புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு அடுத்த வாரம் அரசியலமைப்பு சபையில் தாக்கல் செய்யப்படும் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபைக்கு அரசியலமைப்பு சட்டம் சம்பந்தமான விசேட நிபுணர்கள் வழங்கிய யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் புதிய அரசியலமைப்பு சட்டவரைவு தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கான அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அரசியலமைப்பு சபையில் தாக்கல் செய்ய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது, பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பது, மாகாண சபையை வலுப்படுத்துவது, உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை வழங்குவது போன்ற முக்கியமான பல பரிந்துரைகள் புதிய அரசியலமைப்பு சட்ட வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

2018 தொலைக்காட்சி, கலை அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்…

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திங்களன்று