வணிகம்

புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஆயுர்வேத தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையம்

(UTV|COLOMBO)-ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பிற்குத் தேவையான தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்வதற்காக தயாரிப்பு நிலையமொன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது.

இலங்கை ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் இது தொடர்பாகத் தெரிவிக்கையில் இதன் மூலம் வருடாந்தம் 20 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

 

இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தை புனரமைக்கும் பணிகளின் கீழ் இந்த நிலையம் அமைக்கப்பட இருப்பதாக இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் தலைவர் லால் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

இந்த வருட இறுதிக்குள் இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய சதொச நிறுவனம் தயார்

IDH மருத்துவமனைக்கு தீயணைப்பு கருவிகளை நன்கொடையாக வழங்கி வைத்தியசாலை கட்டமைப்பை பலப்படுத்துகிறது HNB