சூடான செய்திகள் 1

பீடர் டடின் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்

(UTV|COLOMBO) அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பீடர் டடின் இன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு  இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

மேற்படி அவுஸ்திரேலிய அமைச்சர் பீடர் டடின் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட கடுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கும் சென்று பார்வையிடவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரையும் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

 

 

Related posts

சீரற்ற காலநிலை – மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

சடலத்தை நறுமணமூட்ட பயன்படும் போர்மலின் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது (video)

மீண்டும் பணிபுறக்கணிப்பிற்க்கு ஆயத்தமாகும் தொடரூந்து தொழில்நுட்ப சேவை சங்கம்