உள்நாடு

பீசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  நாடாளாவிய ரீதியாக முன்னெடுக்கப்படும் பீசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை விரைவுபடுத்தல் மற்றும் சுற்றுலாப் பயண நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, சுகாதார அமைச்சு மற்றும் தனியார் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் நேற்று(29) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முறையற்ற அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு என்னை வற்புறுத்தினர் – போட்டுடைத்த சபாநாயகர்

அனுமதி சீட்டு இன்றி வீதிகளில் பயணிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு!