வகைப்படுத்தப்படாத

பிலியந்தலை துப்பாக்கிச் சூடு தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை கோரப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை – மொரட்டுவ வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நீதி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.

காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையினை  3 நாட்களுக்குள் கோரியுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பிரபல போதை கடத்தல் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அரச வங்கிக்கு முன்பாக நேற்று இரவு சுற்றிவளைப்பு ஒன்றிட்காக சென்ற காவல்துறையினர்  மீது இனந் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

இதில் 4 பேர் காயமடைந்தனர்.

காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சிலர் பயணித்த சிற்றூர்ந்து மீது இரண்டு உந்துருளிகள் வந்த சிலர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் விற்பனை நிலையம் ஒன்றின் அருகில் இருந்த இரண்டு பிள்ளைகளும், மேலும் ஒருவரும் காயமடைந்தனர்.

நேற்று இரவு 8.30 மணியளவில் போதைப் பொருள் சுற்றிவளைப்புக்காக பிலியந்தலை பிரதேசத்திற்கு இந்த அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதன்போதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளது.

Related posts

“This NCM rings really true” – ACMC [VIDEO]

நஜீப் ரசாக்கை சந்தித்தார் ஜனாதிபதி

தகவல் அறியும் சட்டம் தொடர்பாக முப்படை வீரர்களுக்கு விளக்கம்