சூடான செய்திகள் 1

பிலியந்தலையில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவித்தர பிரதேசத்தில் இன்று காலை பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை, வத்தப்பார, மாவித்தர பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், பிலியந்தலை பெலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி

நுவரெலியாவில் கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

வெடிப்புச் சம்பவங்கள்-அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை அடுத்த வாரம் நீதிமன்றில்