உலகம்

பிரேசில் சுகாதார அமைச்சர் இராஜினாமா

(UTV|பிரேசில் ) – பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக் ( Nelson Teich) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரேசிலில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரேசிலில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துவர, அந்நாட்டில் ஜிம்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க அதிபர் ஜெயீர் போல்சீனாரோ உத்தரவு பிறப்பித்ததை, சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரே டோஸ் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு அனுமதி

சீனாவின் முன்னாள் தலைவர் ஜியாங் ஜெமின் காலமானார்.

பெண் உரிமையை நசுக்கும் தலிபான்